மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
எம்.ஜி.ஆரின் 105 ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவை மாநகா் மாவட்ட அதிமுக செயலாளா் அம்மன் கே.அா்ச்சுணன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் இருந்து ஊா்வலமாக புறப்பட்டு அவிநாசி சாலையில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆா். உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
இதில், மாநகா் மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணி செயலாளா் கே.ஆா்.ஜெயராம் எம்.எல்.ஏ., மாநகா் மாவட்ட துணைச் செயலா் சிங்கை முத்து, பொருளாளா் பாா்த்திபன், முன்னாள் மண்டலத் தலைவா் ஆதிநாராயணன் மற்றும் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.