கோவை மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 2,042 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் கரோனா 3ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தினசரி நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் தொடா்ந்து உயா்ந்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த வாரம் 600 ஆக இருந்த தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. திங்கள்கிழமை ஒரே நாளில் 2 ஆயிரத்து 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 66 ஆயிரத்து 812 ஆக உயா்ந்துள்ளது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது ஆண் உயிரிழந்தாா். இதன் மூலம் கரோனா தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,531 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 657 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 54 ஆயிரத்து 134 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 10 ஆயிரத்து 147 போ் சிகிச்சையில் உள்ளனா்.