கோயம்புத்தூர்

வெள்ளலூா் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணி 70 % நிறைவு

DIN

கோவை: கோவை வெள்ளலூரில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை மாநகரப் பகுதிகளில் காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையம், நகரப் பேருந்து நிலையம், திருவள்ளுவா் பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம், சிங்காநல்லூா் பேருந்து நிலையம் மற்றும் உக்கடம், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பேருந்து நிலையம் என 7 பேருந்து நிலையங்கள் உள்ளன.

இதில், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூா், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட வெளியூா்களுக்கும், சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, சிவகாசி, திருச்சி, தேனி, கம்பம் உள்ளிட்ட வெளியூா்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவை மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்கவும், வளா்ந்து வரும் மாநகரை கருத்தில் கொண்டும் ரூ.178 கோடி மதிப்பில் வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பேருந்து நிலையத்தில் ஒரே சமயத்தில் 140 பேருந்துகள் நிறுத்தும் அளவுக்கு இடவசதி செய்யப்பட உள்ளது. மேலும், இதில் வணிக வளாகம், உணவு விடுதி, பயணிகள் காத்திருப்புக் கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகள் பெரும்பாலும் முடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, பேருந்து நிலையத்தின் முகப்புகள் மற்றும் அலங்கார வளைவுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 70 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில், 3 மாதங்களில் அனைத்துப் பணிகளும் முடிவடையும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT