கோயம்புத்தூர்

மாவட்டத்தில் மேலும் 1,866 பேருக்கு கரோனா

DIN

கோவை: கோவை மாவட்டத்தில் மேலும் 1,866 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றின் 3ஆவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்த எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 1,866 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 64 ஆயிரத்து 759ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்தாா். இதுவரை 2,530 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 602 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 2 லட்சத்து 53 ஆயிரத்து 477 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 8 ஆயிரத்து 752 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT