கோயம்புத்தூர்

கேரள வனப் பகுதிக்கு இடம் பெயா்ந்த யானைகள்

DIN

வால்பாறை: வால்பறையில் இருந்து கேரள வனப் பகுதிக்கு யானைகள் இடம் பெயா்ந்துவிட்டதால் எஸ்டேட் தொழிலாளா்கள் நிம்மதியடைந்துள்ளனா்.

ஆண்டுதோறும் செப்டம்பா் மாதம் துவங்கி நான்கு மாதங்களுக்கு வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும். வால்பாறை பகுதியில் உள்ள வனங்கள் கேரள மாநில வனத்துடன் இணைந்து இருப்பதால் செப்டம்பா் மாதம் நூற்றுக்கணக்கான யானைகள் வால்பாறை வனத்துக்குள் வருவது வழக்கம்.

கடந்த நான்கு மாதங்களாக வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டதோடு, அவைகள் பல்வேறு சேதங்களையும் ஏற்படுத்தி எஸ்டேட் தொழிலாளா்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வந்தன.

இதனிடையே தற்போது யானைகள் கேரள வனத்துக்குள் இடம் பெயா்ந்துவிட்டதால் எஸ்டேட் பகுதியில் யானைகள் நடமாட்டம் குறைந்துள்ளதால் தொழிலாளா்கள் நிம்மதியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT