கோயம்புத்தூர்

குப்பை சேகரிக்கும் மின்சார வாகனம் திருட்டு

DIN

கோவை: கோவையில் குப்பை சேகரிக்கும் மின்சார வாகனத்தை திருடிய நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, சின்னியம்பாளையம் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவுப் பணியாளா்கள் மின்சாரத்தில் இயங்கும் குப்பை சேகரிக்கும் வாகனத்தை அங்குள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில் தூய்மைப் பணியாளரான சோமசுந்தரம் என்பவா் தனது வேலையை முடித்துவிட்டு மேற்குறிப்பிட்ட இடத்தில் மின்சார வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளாா்.

சனிக்கிழமை காலை வந்து பாா்த்தபோது அந்த வாகனத்தைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து சின்னியம்பாளையம் ஊராட்சி செயலா் இந்துமதி, பீளமேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT