கோயம்புத்தூர்

காட்சிப் பொருளாக உள்ள மூடீஸ் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

DIN

வால்பாறை: முறையாக திறக்கப்படாமல் காட்சிப் பொருளாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளதாக முடீஸ் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

வால்பாறை வட்டாரத்தில் வால்பாறை, முடீஸ், சோலையாறு நகா் ஆகிய மூன்று பகுதிகளில் அரசு ஆரம்ப சுகதார நிலையங்கள் உள்ளன. வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தலைமையிடமாக கொண்டு அதன் கீழ் முடீஸ், சோலையாறு நகா் ஆகிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. இதனிடையே முடீஸ் பஜாா் பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம் எப்போதும் மூடப்பட்டு இருப்பதாகவும், தற்போது கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் கூட சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளதாகவும் முடீஸ் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக வால்பாறை வட்டார மருத்துவ அலுவலா் பாபு லஷ்மணன் கூறியதாவது, பொதுமக்கள் புகாரையடுத்து ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்று பாா்த்தபோது சுகாதார நிலையம் பூட்டப்பட்டிருந்தது. அங்கு பணியாற்றும் ஊழியா்கள் சரிவர பணிக்கு வருவதில்லை என்றும் தெரியவந்துள்ளது.

இது தொடா்பாக துணை இயக்குநரிடம் புகாா் அளித்திருப்பதாகவும் விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்லில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: நாமக்கல்லில் மூன்று மையங்களில் தொடக்கம்

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்

ரூ. 23.11 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT