கோயம்புத்தூர்

முழு ஊரடங்கு: மாநகரில் கடை வீதிகள், சாலைகள் வெறிச்சோடின

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கோவை: முழு ஊரடங்கால் கோவை மாநகரில் கடைவீதிகள், சாலைகள் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா, ஒமைக்ரான் நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் 9ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. அதன்படி, 16ஆம் தேதி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் மாநகரில் சாலைகள் வெறிச்சோடின. வழக்கமாக வாகன நெரிசலுடன் காணப்படும் அவிநாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை வெறிச்சோடிக் காணப்பட்டன.

ஆம்புலன்ஸ்கள், காய்கறி வாகனங்கள், உணவு வாகனங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. டவுன்ஹால், ரங்கே கவுடா் வீதி, ஒப்பணக்கார வீதி, காந்திபுரம் 100 அடி சாலை, கிராஸ்கட் சாலை பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன.

ADVERTISEMENT

ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் நிறைந்து காணப்படும் உக்கடம் மொத்த மற்றும்

சில்லறை மீன் சந்தைகள் வெறிச்சோடின. காந்திபுரம் மேம்பாலம், அவிநாசி மேம்பாலம், வடகோவை மேம்பாலம் உள்ளிட்ட பாலங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. மருந்தங்கள், பால் விற்பனையகம், பெட்ரோல் நிலையங்கள் மட்டுமே திறந்திருந்தன. உணவகங்களில் பாா்சல் சேவைகள் மட்டுமே வழங்கப்பட்டன. காவல் துறையின் நடவடிக்கைக்கு பயந்து மக்கள் வீடுகளுக்குள் முடங்கினா். விதிமீறி வாகனங்களில் சுற்றியவா்களுக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT