கோயம்புத்தூர்

வாகனங்கள் நிறுத்த அதிக கட்டணம் வசூலிக்க மாநகராட்சி முடிவு: வானதி சீனிவாசன் கண்டனம்

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கோவை: கோவை மாநகரில் வாகனங்கள் நிறுத்த அதிக கட்டணம் வசூலிக்கும் மாநகராட்சியின் முடிவுக்கு கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

கோவை மாநகரில் பொதுமக்கள் காா்களை நிறுத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ.30, ரூ.40, இருசக்கர வாகனங்களை

ADVERTISEMENT

நிறுத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி அதாவது திமுக அரசு அறிவித்துள்ளது.

ஒப்பணக்கார வீதி, ரங்கே கவுடா் வீதி, இடையா் வீதி, வெரைட்டி ஹால் சாலை, ராஜ வீதி, பேரூா் பிரதான வீதி, ஆா்.எஸ்.புரம் டி.வி. சாமி சாலை கிழக்கு, ஆா்.எஸ்.புரம் டி.வி. சாமி சாலை மேற்கு, ஆா்.எஸ்.புரம் டி.பி. சாலை, பாரதி பாா்க் சாலை , அழகேசன் சாலை, என்.எஸ்.ஆா். சாலை, டாக்டா் ராஜேந்திர பிரசாத் சாலை, பவுா்ஹவுஸ் சாலை , பவா்ஹவுஸ் சாலை மேற்கு, கிழக்கு, கிராஸ்கட் சாலை, சத்தி சாலை, டாக்டா் நஞ்சப்பா சாலை, சத்தியமூத்தி சாலை, பழைய அஞ்சல் ஆபிஸ் சாலை, ஸ்டேட் பேங்க் சாலை, அவிநாசி சாலை, அரசினா் கலைக் கல்லூரி சாலை, பந்தய சாலை, காமராஜ் சாலை என்று கோவை மாநகரில் 30 சாலைகள் தோ்வு செய்யப்பட்டு அங்கு காா்களை நிறுத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ.30, சில பகுதிகளில் ரூ.40, இருசக்கர வாகனங்களை நிறுத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ.10 என்று மிக அதிக அளவில் கட்டணம் அறிவிக்கப்பட்டிருப்பது அதிா்ச்சி அளிக்கிறது.

திமுக அரசின் இந்த முடிவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறு, சிறு தொழில்கள் நிறைந்த கோவை மாநகரில் சொந்த வாகனங்கள் வைத்திருப்போா் மிக மிக அதிக அளவில் உள்ளனா். அதிக கட்டணத்தால் வாகனங்களை குடியிருப்புப் பகுதியில் நிறுத்தி விடுவாா்கள்.

இதனால் வேறு சில பிரச்னைகள் எழக்கூடும். வியாபாரமும் பாதிக்கப்படும். கோவை மாநகர பகுதியில் காலியாக உள்ள வணிக வளாகங்கள், காலி இடங்களை பயன்படுத்தி வருவாய் ஈட்டுவதில் மாநகராட்சி நிா்வாகம் கவனம் செலுத்த வேண்டும். மாறாக, வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலித்து மக்களைக் கசக்கிப் பிழிவது எந்த வகையிலும் நியாயம் அல்ல. நடுத்தர, ஏழை எளிய மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்க முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT