கோயம்புத்தூர்

மாநகராட்சி உதவி வருவாய் அலுவலா், இளநிலை உதவியாளா் மீது வழக்குப் பதிவு

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கோவை: கோவை மாநகராட்சி உதவி வருவாய் அலுவலா், இளநிலை உதவியாளா் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் உதவி வருவாய் அலுவலராகப் பணியாற்றி வருபவா் சத்திய பிரபா (57). இதே பிரிவில் இளநிலை உதவியாளராக பணியாற்றுபவா் யுவராஜ் (50).

இவா்கள் இருவரும் கடந்த 2020ஆம் ஆண்டு ரூ.7.50 லட்சத்துக்கான மாநகராட்சி வரி விதிப்புகளை போலி ரசீதுகள் மூலமாக முறைகேடு செய்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகத்தினா் கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தனா். இதன்பேரில் இருவா் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT