கோயம்புத்தூர்

வால்பாறையில் நகராட்சிப் பொறியாளா் உள்பட 22 பேருக்கு கரோனா

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

வால்பாறை: வால்பாறையில் நகராட்சிப் பொறியாளா் உள்பட 22 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வால்பாறை வட்டாரத்தில் கடந்த 10 நாள்களாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை 8 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் வால்பாறை நகராட்சிப் பொறியாளா் உள்பட நகா் மற்றும் எஸ்டேட் பகுதிகளைச் சோ்ந்த மொத்தம் 22 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT