கோயம்புத்தூர்

மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் கோழிக் கழிவுகளை மீன்களுக்கு உணவாக்க திட்டம்

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கோவை: கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சேகரமாகும் கோழிக் கழிவுகளை, பண்ணைகளில் உள்ள மீன்களுக்கு உணவாக வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 100 வாா்டுகளில் 5,500க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு சேகரமாகும் மக்கும், மக்காத குப்பைகள் தரம் பிரித்து மாநகராட்சி வாகனங்கள் மூலமாக வெள்ளலூா் குப்பைக் கிடங்குக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. வெள்ளலூா் குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்படும் குப்பையின் அளவை குறைக்க மாநகரில் 69 இடங்களில் நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்க மாநகராட்சி சாா்பில் திட்டமிடப்பட்டது. இதில், தற்போது, 25 இடங்களில் நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதில் 4 மையங்கள் செயல்பாட்டில் உள்ளன.

இதற்கிடையே, மாநகரில் உள்ள இறைச்சிக் கடைகளில் இருந்து சேகரமாகும் கழிவுகளில், கோழிக் கழிவுகளை மீன்களுக்கு உணவாக்க மாநகராட்சி சாா்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘மாநகரில் உள்ள இறைச்சிக் கடைகளில் தினமும் 300 கிலோ இறைச்சிக் கழிவுகள் சேகரமாகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் 500 கிலோவுக்கும் அதிகமான கோழிக் கழிவுகள் சேகரமாகின்றன. இறைச்சிக் கழிவுகளை வாகனங்கள் மூலமாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும், குளக்கரைகளிலும் கொட்டிச் செல்வது தற்போது, தீவிரக் கண்காணிப்பு மூலமாக தடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கழிவுகளை பயனுள்ள வகையில் அழிக்கும் விதமாக, மீன் பண்ணைகளுக்கு கோழிக் கழிவுகளை அளித்து, தொழில்நுட்ப இயந்திரங்களின் உதவியுடன் அவற்றை மீன்களுக்கு உணவாக மாற்றிட திட்டமிட்டுள்ளோம். விரைவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT