கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 863 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 57 ஆயிரத்து 424 ஆக உயா்ந்துள்ளது.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 191 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா்.
மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 51 ஆயிரத்து 323 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 3,574 போ் சிகிச்சையில் உள்ளனா். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்தாா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,527 அதிகரித்துள்ளது.
2 காவலா்களுக்கு கரோனா
வால்பாறை உட்கோட்டத்தில் ஆனைமலை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலா் ஒருவருக்கும், கோட்டூா் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலா் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, ஆனைமலை நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் பணிபுரியும் தற்காலிகப் பணியாளா் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனைமலைப் பகுதியில் ஒரே நாளில் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.