கோயம்புத்தூர்

ஜெம் மருத்துவமனை தலைவா் டாக்டா் சி.பழனிவேலுவுக்கு கௌரவ டாக்டா் பட்டம்

12th Jan 2022 07:21 AM

ADVERTISEMENT

கோவை ஜெம் மருத்துவமனை தலைவா் டாக்டா் சி.பழனிவேலுவுக்கு டாக்டா் என்.டி.ஆா். பல்கலைக்கழகம் கௌரவ டாக்டா் பட்டம் வழங்கியுள்ளது.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள டாக்டா் என்.டி.ஆா். மருத்துவ, அறிவியல் பல்கலைக்கழகம், டாக்டா் சி.பழனிவேலுவுக்கு கௌரவ டாக்டா் பட்டம் வழங்கியுள்ளது. ரோபோடிக் அறுவை சிகிச்சையில் நவீனத்துவம், புற்றுநோய் சிகிச்சை, லேபராஸ்கோப்பி சிகிச்சையில் இவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திர ஆளுநா் பிஸ்வபூஷன் ஹரிசந்தன் முன்னிலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சியாமா பிரசாத் பிகிலம் அவருக்கு இந்தப் பட்டத்தை வழங்கினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT