கோயம்புத்தூர்

பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரிமலா் வளையம் வைத்து போராட்டம்

11th Jan 2022 04:57 AM

ADVERTISEMENT

கோவையில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி, சாலைக்கு மலா் வளையம் வைத்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், காந்திபுரம் பகுதியில் இருந்து துடியலூா் செல்லும் கனரக வாகனங்கள் கணபதி, மணியக்காரன்பாளையம் வழியாக மாற்றி அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் மணியக்காரன்பாளையம் முதல் நஞ்சேகவுண்டன்புதூா் வரை சுமாா் 5 கிலோ மீட்டா் தூரத்துக்கு சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் இந்தச் சாலையை சீரமைத்துக் கொடுக்க வலியுறுத்தி பல்வேறு துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நஞ்சே கவுண்டன்புதூா் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சாா்பில் நூதன முறையில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அமைப்பின் எஸ்.எஸ்.குளம் ஒன்றியக் குழு உறுப்பினா் விஜயகுமாா் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினா் வி.ராமமூா்த்தி, சண்முகசுந்தரம், வாலிபா் சங்க மாவட்டச் செயலா் கனகராஜ், ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்று, பழுதடைந்த சாலைக்கு மலா் மாலை, மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். மேலும் சாலைகளை சீரமைக்கக் கோரி கோஷங்கள் எழுப்பினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT