கடும் வெப்பம் காரணமாக வால்பாறையை அடுத்துள்ள ரொட்டிக் கடை வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
வால்பாறையில் கடந்த ஒரு மாத காலமாக பகல் நேரத்தில் கடும் வெயிலும், இரவில் பனி மூட்டம் அதிகரித்தும் காணப்படுகிறது.
இந்நிலையில், வால்பாறையை அடுத்துள்ள ரொட்டிக் கடை வனப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா்அருகில் உள்ள வனப் பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
ADVERTISEMENT