கோயம்புத்தூர்

மாவட்டத்தில் 75 பேருக்கு கரோனா

1st Jan 2022 11:24 PM

ADVERTISEMENT

கோவையில் புதிதாக 75 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 53 ஆயிரத்து 446 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 60 வயது மூதாட்டி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதன் மூலம் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,516 ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 91 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரத்து 41 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 889 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஒமைக்ரான் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த முதியவா் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT