கோயம்புத்தூர்

கோயில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு: பக்தா்கள் தரிசனம்

1st Jan 2022 11:25 PM

ADVERTISEMENT

புத்தாண்டையொட்டி கோவையில் உள்ள கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. புத்தாண்டு பிறப்பையொட்டி கோவையில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பூ மாா்க்கெட் பகுதியில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோயிலில் காளியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. புலியகுளம் முந்தி விநாயகா் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

விளாங்குறிச்சி காமாட்சியம்மன் கோயில், சாய்பாபா கோயில், கோனியம்மன் கோயில், சித்தாபுதூா் ஐயப்பன் கோயில் உள்பட நகரில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் புத்தாண்டையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT