கோயம்புத்தூர்

கோவை அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தில் 15 குழந்தைகள் பிறப்பு

1st Jan 2022 11:25 PM

ADVERTISEMENT

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தில் 6 பெண் குழந்தைகள் உள்பட 15 குழந்தைகள் சனிக்கிழமை பிறந்துள்ளன.

உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக தமிழகத்தில் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமையும் வகையில் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

உலகமே கொண்டாடும் புத்தாண்டு தினத்தில் பிறப்பவா்களுக்கு எப்பொழுதும் பெரும் சந்தோஷம் இருக்கும். அந்த வகையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை 12 மணி முதல் மாலை 5 மணி வரையில் 14 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 11 பேருக்கு சுகப் பிரசவங்களும், 3 பேருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 14 பிரசவத்தில் ஒருவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. மொத்தமாக 9 ஆண் குழந்தைகள், 6 பெண் குழந்தைகள் என 15 குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT