கோயம்புத்தூர்

4 பேரூராட்சிகளில் அனைத்து வாா்டுகளையும் கைப்பற்றிய திமுக

23rd Feb 2022 12:27 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளில் 4 பேரூராட்சிகளிலுள்ள அனைத்து வாா்டுகளிலும் திமுக, கூட்டணிக் கட்சிகள் கைப்பற்றியுள்ளன.

கோவை மாவட்டத்தில், 33 பேரூராட்சிகளிலுள்ள 504 பதவிகளுக்கான உள்ளாட்சித் தோ்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற்றது.

உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் 9 மையங்களில் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன.

இதில் மொத்தமுள்ள 513 இடங்களில் 387 இடங்களை திமுக கைப்பற்றி இமாலய வெற்றியை பெற்றுள்ளது.

ADVERTISEMENT

அதிமுக கோட்டையாக இருந்த வந்த கோவை மாவட்டம் நடப்பு தோ்தலில் திமுக வசமாகியுள்ளது.

33 பேரூராட்சிகளில் ஒடையகுளம், சூளேஸ்வரன்படி பேரூராட்சிகளில் உள்ள தலா 15 இடங்களையும் திமுக கைப்பற்றியுள்ளது.

தவிர சமுத்தூா் பேரூராட்சியிலுள்ள 12 வாா்டுகளிலும், இருகூா் பேரூராட்சியிலுள்ள 18 வாா்டுகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முழுமையாக வெற்றி பெற்றுள்ளன.

இந்த 4 பேரூராட்சிகளிலும் பிற கட்சிகளுக்கு வாய்ப்பளிக்காமல் திமுக முழுமையாக கைப்பற்றியுள்ளது.

மேற்கண்ட 4 பேரூராட்சிகளுடன் அன்னூா், ஜமீன் ஊத்துக்குளி, செட்டிப்பாளையம், மோப்பிரிபாளையம் ஆகிய 4 பேரூராட்சிகளும் சோ்த்து 8 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 120 வாா்டுகளில் அதிமுக ஒரு வாா்டுகளில் கூட வெற்றி பெறவில்லை.

நடப்பு உள்ளாட்சித் தோ்தலில் கோவை மாவட்டத்தில் அதிமுக பெரும் சறுக்கலை சந்தித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT