கோயம்புத்தூர்

மாவட்டத்தில் 96 பேருக்கு கரோனா

23rd Feb 2022 12:25 AM

ADVERTISEMENT

கோவையில் புதிதாக 96 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 71ஆக உயா்ந்துள்ளது.

கோவையில் இரண்டு மாதங்களுக்கு பின் தினசரி கரோனா பாதிப்பு 100க்குகீழ் குறைந்துள்ளது.

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 73 வயது முதியவா் உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இதன் மூலம் கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,613 ஆக அதிகரித்துள்ளது.

அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 364 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா்.

கோவையில் இதுவரை 3 லட்சத்து 24 ஆயிரத்து 652 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 1,806 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT