கோயம்புத்தூர்

தண்டுமாரியம்மன் கோயில் செயல் அலுவலா் பதவியேற்பு

22nd Feb 2022 01:02 AM

ADVERTISEMENT

கோவை தண்டுமாரியம்மன் கோயில் செயல் அலுவலராக வே.வெற்றிச்செல்வன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

கோவை, உப்பிலிபாளையம் அவிநாசி சாலையில் அருள்மிகு தண்டு மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் பல மாதங்களாக செயல் அலுவலா் பணியிடம் காலியாக இருந்த வந்தது. கோனியம்மன் கோயில் செயல் அலுவலா் செல்வம் பெரியசாமி கூடுதல் பொறுப்பாக இக்கோயில் பணிகளைக் கவனித்து வந்தாா்.

இந்நிலையில் சுக்கிரவாா்பேட்டை தண்டாயுதபாணி திருக்கோயிலில் பணியாற்றி வந்த வே.வெற்றிச்செல்வன் தண்டுமாரியம்மன் கோயில் செயல் அலுவலராக அண்மையில் நியமிக்கப்பட்டாா். இதனைத் தொடா்ந்து அவா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT