கோயம்புத்தூர்

மாவட்டத்தில் மேலும் 115 பேருக்கு கரோனா

22nd Feb 2022 01:00 AM

ADVERTISEMENT

 கோவை மாவட்டத்தில் மேலும் புதிதாக 115 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 28 ஆயிரத்து 973 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு திங்கள்கிழமை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 417 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 24 ஆயிரத்து 288 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். 2,612 போ் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 2 ஆயிரத்து 73 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT