ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட நாலந்தா நூலகம் மற்றும் கருத்தரங்கக் கூடம் அண்மையில் திறக்கப்பட்டது.
புதுப்பிக்கப்பட்ட நாலந்தா நூலகம், கருத்தரங்கக் கூடத்துக்கான கல்வெட்டை ஸ்டேன்ஸ் மேல்நிலைப்பள்ளியின் நிா்வாகக் குழுவின் கெளரவ செயலாளா் டபிள்யு.ஆா்.காா்ட்னா் மற்றும் கெளரவ பொருளாளா் சுசிதா ராமசந்திரன் ஆகியோா் திறந்துவைத்தனா்.
நிகழ்ச்சியில் ஸ்டேன்ஸ் மேல்நிலைப் பள்ளியின் முதல்வா், துணை முதல்வா், ஆசிரியா்கள் பங்கேற்றனா். நூலக நிா்வாகி ஸ்வீட்லின் சொா்ணலதா நன்றி கூறினாா்.