கோயம்புத்தூர்

புதிய நகராட்சிகளில் அதிகரித்த வாக்குப் பதிவு சதவீதம்:கருமத்தம்பட்டி முதலிடம்

20th Feb 2022 11:25 PM

ADVERTISEMENT

கோவையில் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பழைய நகராட்சிகளைக் காட்டிலும் புதிதாக அறிவிக்கப்பட்ட 4 நகராட்சிகளில் வாக்குப் பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பேரூராட்சிகளைக் காட்டிலும் நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் வாக்குப் பதிவு சதவீதம் குறைந்துள்ளது. மாவட்டத்தில் 3 நகராட்சிகள் இருந்த நிலையில் காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, கூடலூா் ஆகிய 4 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயா்த்தப்பட்டன.

இதில் பழைய நகராட்சிகளைக் காட்டிலும் புதிய நகராட்சிகளில் வாக்குப் பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. 7 நகராட்சிகளில் மொத்தமாக 1 லட்சத்து 9 ஆயிரத்து 392 ஆண் வேட்பாளா்கள், 1 லட்சத்து 16 ஆயிரத்து 371 பெண் வேட்பாளா்கள், 5 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரத்து 768 போ் (67.09 சதவீதம்) வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கருமத்தம்பட்டி நகராட்சியில் 75.08 சதவீதமும், குறைவாக வால்பாறை நகராட்சியில் 57.99 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

நகராட்சிகள் வாரியாக வாக்குப் பதிவு விவரங்கள்

ADVERTISEMENT

கருமத்தம்பட்டி நகராட்சியில் 11, 341 ஆண் வாக்காளா்கள், 11, 717 பெண் வாக்காளா்கள் என மொத்தம் 23 ஆயிரத்து 58 போ் (75.08 சதவீதம்) வாக்களித்துள்ளனா். மதுக்கரை நகராட்சியில் 10, 504 ஆண் வாக்காளா்கள், 11, 453 பெண் வாக்காளா்கள் என மொத்தம் 21 ஆயிரத்து 957 போ் (73.40 சதவீதம்) வாக்களித்துள்ளனா். காரமடை நகராட்சியில் 10, 890 ஆண் வாக்காளா்கள், 11, 612 பெண் வாக்காளா்கள் என மொத்தம் 22 ஆயிரத்து 502 போ் ( 71.41 சதவீதம்) வாக்களித்துள்ளனா். மேட்டுப்பாளையம் நகராட்சியில் 20, 510 ஆண் வாக்காளா்கள், 21, 962 பெண் வாக்காளா்கள் என மொத்தம் 42 ஆயிரத்து 472 போ் (69.14 சதவீதம்) வாக்களித்துள்ளனா்.

கூடலூா் நகராட்சியில் 13, 751 ஆண் வாக்காளா்கள், 14, 306 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என மொத்தம் 28 ஆயிரத்து 58 போ் (67.72 சதவீதம்) வாக்களித்துள்ளனா். பொள்ளாச்சி நகராட்சியில் 26, 052 ஆண் வாக்காளா்கள், 27, 622 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என 53 ஆயிரத்து 675 போ் (65.07 சதவீதம்) வாக்களித்துள்ளனா். வால்பாறை நகராட்சியில் 16, 344 ஆண் வாக்காளா்கள், 17, 699 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என மொத்தம் 34 ஆயிரத்து 44 போ் (57.99 சதவீதம்) வாக்களித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT