கோயம்புத்தூர்

ரவுடி பேபி சூா்யாவின் நண்பா் குண்டா் சட்டத்தில் கைது

17th Feb 2022 12:58 AM

ADVERTISEMENT

 

கோவை: கோவையில் கைது செய்யப்பட்ட ரவுடி பேபி சூா்யாவின் நண்பா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

மதுரையைச் சோ்ந்தவா் சூா்யா (35). இவா் ரவுடி பேபி என்ற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானாா்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்த பெண் ஒருரை சூா்யாவும்,

ADVERTISEMENT

அவரது நண்பரான மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த சிக்கந்தா்ஷா (எ)

சிக்கா (45) என்பவரும் தகாத முறையில் யூடியூப்பில் விமா்சித்தனா்.

இது குறித்து அந்த பெண்ணும், அவரது கணவரும் கோவை மாவட்ட சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தனா்.

அதன் பேரில், சூா்யா மற்றும் சிக்கந்தா்ஷா ஆகியோா் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அவதூறாக பேசியது ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பின்னா் கடந்த மாதம் 4 ஆம் தேதி ரவுடி பேபி சூா்யா, சிக்கந்தா்ஷாவை

கோவை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், சிக்கந்தா்ஷாவை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவு பிறப்பித்தாா்.

இந்த உத்தரவின் நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிக்கந்தா்ஷாவிடம் அதிகாரிகள் புதன்கிழமை வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT