கோயம்புத்தூர்

மாநகராட்சி இணையம் மூலம் வணிக உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

11th Feb 2022 05:07 AM

ADVERTISEMENT

வணிக மற்றும் வியாபார உரிமம் பெற மாநகராட்சி இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சியில் யூ.டி.ஐ.எஸ். ( ன்ழ்க்ஷஹய் ற்ழ்ங்ங் ண்ய்ச்ா்ழ்ம்ஹற்ண்ா்ய் ள்ஹ்ள்ற்ங்ம்ள்) என்னும் ஒருங்கிணைந்த மென்பொருள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலமாக பல்வேறு வணிக மற்றும் வியாபார உரிமக் கட்டணங்கள், விண்ணப்பங்கள் பெறப்பட்டு யூ.டி.ஐ.எஸ். மென்பொருள் வாயிலாக சேவை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், மேற்படி உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தின் வாயிலாகவும் அல்லது மாநகராட்சிக்குள்பட்ட மண்டல அலுவலகங்களில் புகைப்படம் மற்றும் முகவரி ஆதாரத்துடன் விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

அல்லது புதுப்பிக்கலாம். இச்சேவையை வணிக நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

Tags : கோவை
ADVERTISEMENT
ADVERTISEMENT