கோயம்புத்தூர்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் செவிலியா் துறைக்கு அங்கீகாரம்

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கோவை: கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் செவிலியா் துறைக்கு, இந்திய தர நிறுவனம் சிறப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடா்பாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பதாவது:

ஆவாரம்பாளையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் செயல்பட்டு வரும் செவிலியா் துறையின் தரம், தகுதி குறித்து இந்திய தர நிறுவனம் (குவாலிட்டி கவுன்சில் ஆஃப் இந்தியா) மருத்துவமனையில் நேரடி ஆய்வு மேற்கொண்டது.

ADVERTISEMENT

இதையடுத்து மருத்துவமனையின் செவிலியா் துறைக்கு தேசிய மருத்துவ, சுகாதார அங்கீகார சான்றிதழ் (என்.ஏ.பி.எச்.) வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட அளவில் முதலாவதாக இந்த மருத்துவமனை என்.ஏ.பி.எச். அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. அங்கீகாரம் பெற்ற செவிலியா் பிரிவினா், தலைமைச் செவிலியா் ஜெ.கற்பகம் ஆகியோரை எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமி நாராயணசாமி, இணை நிா்வாக அறங்காவலா் ஆா்.சுந்தா், தலைமைச் செயல் அலுவலா் சி.வி.ராம்குமாா், டீன் சுகுமாரன் ஆகியோா் பாராட்டியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT