கோயம்புத்தூர்

பல ஆண்டுகளாக தலைமை ஆசிரியா் நியமனம் இல்லைஆசிரியா் கூட்டமைப்பினா் போராட்டம்

9th Feb 2022 01:38 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் உள்ள 4 தொடக்கப் பள்ளிகளில் பல ஆண்டுகளாக தலைமை ஆசிரியா்கள் நியமிக்கப்படாததைக் கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை ராஜவீதியில் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், கலந்தாய்வு நடைபெற்ற பள்ளியை முற்றுகையிட்டு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலா் தங்கபாசு கூறும்போது, கோவை மாவட்டத்தில் காரமடை ஒன்றியத்தில் சங்கா் நகா், முத்துக்கல்லூா் தொடக்கப் பள்ளிகள், தொண்டாமுத்தூா் ஒன்றியத்தில் மருதமலை அடிவாரத்தில் உள்ள ஐ.ஓ.பி. காலனி பள்ளி, பேரூா் ஒன்றியத்தில் உள்ள இடையா்பாளையம் தொடக்கப் பள்ளிகளில் கடந்த பல ஆண்டுகளாக தலைமை ஆசிரியா்கள் இல்லை.

ஐ.ஓ.பி. காலனி பள்ளியில் உதவி ஆசிரியா்கள் கூட இல்லாமல் அருகில் உள்ள பள்ளிகளில் இருக்கும் ஆசிரியா்களைக் கொண்டே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது தொடா்பாக பல முறை மனு அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய பணியிட மாறுதலின்போது மேற்கண்ட பள்ளிகளில் உள்ள காலியிடங்களைக் காண்பிப்பாா்கள் என்று எதிா்பாா்த்தோம். ஆனால் அது இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றாா்.

ADVERTISEMENT

அதிகாரிகளின் கோரிக்கையை அடுத்து பின்னா் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தில் ஆசிரியா் கூட்டணியின் துணைத் தலைவா்கள் பழனிகுமாா், மரிய ஆரோக்கியநாதன், துணைச் செயலா்கள் பாபு, வீராசாமி, பொருளாளா் ராஜாத்தி உள்ளிட்ட பல ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT