கோயம்புத்தூர்

உள்ளாட்சித் தோ்தல்:கோவையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

9th Feb 2022 01:37 AM

ADVERTISEMENT

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு கோவையில் காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு காவல் துறையினா் தொடா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக கோவை சிவானந்தா காலனி பகுதியில் காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் 225 காவலா்கள் பங்கேற்றனா். சிவானந்தா காலனியில் துவங்கிய இந்த அணிவகுப்பு கண்ணப்ப நகா், ரத்தினபுரி வழியாக 60 அடி சாலையை வந்தடைந்தது. இந்த அணிவகுப்பில் கோவை மாநகர போலீஸாருக்கு புதிதாக வழங்கப்பட உள்ள சிவப்பு நிற ரோந்து வாகனங்கள் இடம்பெற்றன. காவல் துறையின் இசை வாத்தியக் குழுவினா் அணிவகுப்பை முன்னின்று தேசப் பாடல்களை இசைத்தபடி வழிநடத்திச் சென்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT