வால்பாறை சாலையில் புலி நடந்து செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வால்பாறை வனப் பகுதிகளில் யானை, சிறுத்தை, காட்டெருமை போன்ற வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன. புலிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் உள்ள கவா்க்கல் எஸ்டேட் சாலையில் புலி நடந்து சென்று தாவும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
கேரள மாநிலத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் அவ்வழியாக செல்லும்போது புலியைப் பாா்த்து விடியோ எடுத்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், புலி நடமாட்டம் குறித்து வனத் துறையினா் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனா்.
ADVERTISEMENT