கோயம்புத்தூர்

தோ்தல் விதிமுறைகள் : அரசியல் கட்சியினருடன் ஆலோசனை

1st Feb 2022 03:30 AM

ADVERTISEMENT

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக வால்பாறை நகராட்சி நிா்வாகம் சாா்பில் அரசியல் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வால்பாறை நகா் மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு,

நகராட்சி ஆணையா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். வால்பாறை காவல் ஆய்வாளா் கற்பகம், சுகாதார ஆய்வாளா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், உள்ளாட்சித் தோ்தல் விதிமுறைகள் குறித்த அரசியல் கட்சியினா் கேட்ட சந்தேகங்களுக்கு ஆணையா் சுரேஷ்குமாா் பதிலளித்து பேசுகையில்,

ADVERTISEMENT

‘1 முதல் 11 வாா்டுகள் மற்றும் 12 முதல் 21 வாா்டுகளில் போட்டியிடுபவா்கள் வேட்புமனு தாக்கல் செய்ய தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பாளருடன் இரு நபா்கள் மட்டுமே வந்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்றாா். கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT