கோயம்புத்தூர்

இன்று திறப்பு: தயாா் நிலையில் பள்ளி, கல்லூரிகள்

1st Feb 2022 03:30 AM

ADVERTISEMENT

கோவையில் பள்ளி, கல்லூரிகள் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 1) திறக்கப்படும் நிலையில், தேவையான முன்னேற்பாடுகளை கல்வி நிறுவனங்கள் செய்துள்ளன.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு கட்டுப்பாடுகளைத் தளா்த்தியுள்ளது. மேலும், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி, 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் எனவும், அதேபோல கல்லூரிகளும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இதற்காக அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவா்களை வரவேற்க கல்வி நிா்வாகங்கள் தயாா் நிலையில் உள்ளன.

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். வகுப்பறையில் ஒன்றாக அமா்ந்து உணவு உண்ணக் கூடாது. உடல் வெப்பநிலையை சோதனை செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள், பணியாளா்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

இதைப் பின்பற்றி கோவை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT