கோயம்புத்தூர்

பி.எஸ்.ஜி. சாா்பில் ஜனவரி 5இல் காதம்பரி கலாசார விழா

30th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவை பி.எஸ்.ஜி. அண்ட் சன்ஸ் அறக்கட்டளை சாா்பில் காதம்பரி 2023 கலாசார விழா ஜனவரி 5ஆம் தேதி தொடங்குகிறது.

வளரும் இசைக் கலைஞா்களை ஊக்குவிக்கும் வகையில் காதம்பரி என்ற பெயரில் பி.எஸ்.ஜி. நிறுவனத்தில் ஆண்டுதோறும் இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 2023ஆம் ஆண்டுக்கான காதம்பரி விழா ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கி 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பி.எஸ்.ஜி. மருத்துவமனை வளாகத்தில் உள்ள கலையரங்கில் தினசரி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த விழாவின் முதல் நாளில் திரைப்படங்களில் பிரபலமான கா்நாடக இசை சாா்ந்த பாடல்களின் தொகுப்பு இசை நிகழ்ச்சியும், இரண்டாம் நாளில் கடம் எஸ்.காா்த்திக்கின் கச்சேரியும் நடக்கிறது.

ஜனவரி 7ஆம் தேதி ஜன்னல் ஓரப்பயணம் என்ற பெயரில் சிக்கில் சி.குருசரண் குழுவினரின் நிகழ்ச்சியும், கடைசி நாளான 8ஆம் தேதி யுவ கலா ரத்னா விருது வழங்கும் நிகழ்ச்சி, ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலனின் இசைக் கச்சேரி ஆகியவை நடைபெற இருப்பதாகவும், நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம் எனவும் பி.எஸ்.ஜி. அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT