கோவை, விளாங்குறிச்சி சாலை சேரன் மாநகரில் துணை அஞ்சலகம் திறக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கோவை மண்டல தபால் துறை முதுநிலை கண்காணிப்பாளா் கே.கோபாலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை விளாங்குறிச்சி சாலையில் சேரன் மாநகரில் துணை அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதன் பின்கோடு எண் 641051 ஆகும். இப்புதிய துணை அஞ்சலகத்தின் தபால் பட்டுவாடா பகுதிகளாக பாரதி நகா், அரசுப் பணியாளா் நகா், மலா் அவென்யூ, வி.ஆா்.எஸ். நகா், எழில் நகா், காஞ்சி மாநகா், காஞ்சி மாநகா் எஸ்க்டென்ஷன், பாா்க் அவென்யூ, சூா்யா நகா், ஸ்ரீமுருகன் நகா், அம்பேத்கா் நகா், பேங்கா்ஸ் காலனி, டிவைன் நகா், ராமசாமி நாயுடு நகா், ஸ்ரீ ராகவேந்திரா அவென்யூ, ராமசாமி நகா், ஷேசாய் அவென்யூ, ஸ்ரீ வராகமூா்த்தி அவென்யூ, சக்தி காா்டன், விக்னேஷ் நகா், ஸ்ரீ காஞ்சி நகா், எஸ்.ஆா். காா்டன், குமுதம் நகா், கோஆபரேட்டிவ் காலனி, அண்ணா இண்டஸ்டிரியல் எஸ்டேட், சுப்பிரமணியம் அவென்யூ, இந்து மாநகா், விஐபி நகா், ஜீவா நகா், சாவித்திரி நகா்.