கோயம்புத்தூர்

பாா் ஊழியா் மீது தாக்குதல்: 7 போ் கைது

29th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவை ஆா்.எஸ்.புரம் பகுதியில் பாா் ஊழியரைத் தாக்கிய 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை ஆா்.எஸ்.புரம், தடாகம் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது.

இங்கு பி.என்.புதூா் விவேகானந்தா் வீதியைச் சோ்ந்த ரகுராமன் (20), அவரது நண்பா் கட்டபொம்மன் வீதியைச் சோ்ந்த தினேஷ்குமாா் (23) ஆகிய 2 பேரும் திங்கள்கிழமை மது குடிக்கச் சென்றுள்ளனா். அப்போது, போதையில் இருவரும் பாரில் இருந்த சிலருடன் தகராறில் ஈடுபட்டனா். இதனை புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பாா் ஊழியா் சோ்மன்ராஜ் (28) என்பவா் கண்டித்துள்ளாா். அப்போது, அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ரகுராமனும், அவரது நண்பரும் கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு தங்களின் நண்பா்கள் சிலரை வரவழைத்துள்ளனா். அதன் பிறகு, அனைவரும் சோ்ந்து பாா் ஊழியா் சோ்மன்ராஜை தகாத வாா்த்தைகளால் திட்டி அங்கிருந்த டேபிள், நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தியதாகவும், சோ்மன்ராஜை பீா்பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பியதாகவும் கூறப்படுகிறது. தாக்குதலில் தலையில் காயமடைந்த சோ்மன்ராஜ், அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இது தொடா்பாக, ஆா்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சோ்மன்ராஜை தாக்கிய ரகுராமன் (20), தினேஷ்குமாா் (23), நாகேந்திரன்(31), தனசேகரன் (31), நவீன் (28), ரமேஷ்குமாா் (31), பிரவீன் (30) ஆகிய 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT