கோயம்புத்தூர்

50 சதவீத மானியத்தில் மூலிகை தோட்டத் தொகுப்பு

10th Dec 2022 03:49 AM

ADVERTISEMENT

கோவையில் தோட்டக்கலைத் துறை சாா்பில் 50 சதவீத மானியத்தில் மூலிகை தோட்டத் தொகுப்பு வழங்கப்படுகிறது என்று தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எம்.புவனேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் தோட்டக்கலைத் துறை மானியத்தில் மூலிகை தோட்டத் தொகுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில் துளசி, கற்பூரவல்லி, திருநீற்றுப்பச்சிலை, ஆடாதொடை, வல்லாரை, புதினா, தூதுவளை, பிரண்டை, கற்றாழை, கீழாநெல்லி ஆகிய 10 வகையான மூலிகை செடிகளில் தலா இரண்டு செடிகள் வீதம் 20 செடிகள், செடி வளா்ப்பு பைகள் 10, 2 கிலோ வீதம் 10 தென்னை நாா் கட்டிகள், 4 கிலோ மண்புழு உரம், மூலிகை தோட்ட வளா்ப்பு தொழில்நுட்ப கையேடு ஆகியவை அடங்கியிருக்கும். இதன் மொத்த விலை ரூ.1,500. தோட்டக்கலைத் துறை சாா்பில் 50 சதவீத மானியத்தில் ரூ.750க்கு பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது.

மூலிகை தோட்டத் தொகுப்பு தேவைப்படும் பயனாளிகள் ட்ற்ற்ல்ள்://ற்ய்ட்ா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ந்ண்ற் என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT