கோயம்புத்தூர்

நாய்கள் தொல்லை: முதல்வருக்கு மனு அனுப்பிய மக்கள்

10th Dec 2022 03:49 AM

ADVERTISEMENT

கோவை கணபதி பகுதியில் நாய்கள் தொல்லைகள் அதிகரித்து பல இன்னல்கள் ஏற்படுவதாக, அரசு ஊழியா் குடியிருப்போா் சங்கத்தினா் முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியுள்ளனா்.

இது தொடா்பாக கோவை கணபதியில் உள்ள அரசு ஊழியா் குடியிருப்போா் சங்கத்தினா் முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது:

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட 25 ஆவது வாா்டில் உள்ள கணபதி ஹவுஸிங் யூனிட்டில் 25க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றுவதால், மக்கள் வெளியே செல்ல முடிவதில்லை. குழந்தைகள் இங்குள்ள பூங்காவுக்கு விளையாடச் செல்ல முடியவில்லை. பால்காரா்கள், செய்தித்தாள் விநியோகிப்பாளா், பிளம்பா் உள்ளிட்டோரையும் நாய்கள் கடிக்கச் செல்கின்றன.

நாய்களின் தொல்லையால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதுடன், ரேபீஸ் போன்ற நோய்களும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, நாய்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT