கோயம்புத்தூர்

பொங்கல் பண்டிகை: கோவையில் இருந்து 240 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

10th Dec 2022 03:53 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை மண்டலத்தில் இருந்து பொங்கல் பண்டிகைக்கு 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவா் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலம், ஈரோடு, நாமக்கல் வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள் காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்தும், மதுரை, தேனி, விருதுநகா், திருநெல்வேலி, நாகா்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்தும் , பொள்ளாச்சி, பழனி, உடுமலை, வால்பாறை, மதுரை, தேனி மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.

இதில், மதுரை,தேனி, திருநெல்வேலி பகுதிகளுக்கு 140 பேருந்துகள், சேலம் , நாமக்கல் வழித்தடத்தில் 100 பேருந்துகள் என 240 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT