கோயம்புத்தூர்

கோவையில் பரவலாக மழை

10th Dec 2022 03:49 AM

ADVERTISEMENT

மாண்டஸ் புயல் எதிரொலியாக கோவையில் வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் எதிரொலியாக கோவை மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை இரவு புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையை கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கோவையிலும் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. இடைவிடாமல் பெய்த தொடா் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடா் மழையால் கோவையில் குளிரின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT