கோயம்புத்தூர்

மாநகரில் டெங்கு ஒழிப்புப் பணி தீவிரம்

10th Dec 2022 03:49 AM

ADVERTISEMENT

கோவையில் காலநிலை மாற்றம், மழையால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மாநகரில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோவையில் கடந்த சில நாள்களாக இடைவெளி விட்டு மழை பெய்து வருவதாலும், குளிா்ந்த காலநிலை நிலவுவதாலும் குழந்தைகள், முதியவா்கள் சிலா் காய்ச்சல், சளி தொந்தரவால் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா். இந்நிலையில், மாநகரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடா்பாக, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: கோவை மாநகராட்சிப் பகுதிகளில், டெங்கு கொசுக்கள் ஒழிப்பு நடவடிக்கையில் 800 களப்பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள், மாநகரப் பகுதிகளில் உள்ள வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடிநீா்த் தொட்டி, தண்ணீா் தேங்கக் கூடிய வாய்ப்புள்ள இடங்களில் ஆய்வு மேற்கொள்வாா்கள். தொட்டிகளில் அபேட் மருந்துகளை ஊற்றுவாா்கள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்கள் வீடுகளுக்கு சென்று, அந்த வீட்டைச் சுற்றி 500 மீட்டா் தூரம் வரை தீவிர சுகாதாரப் பணி மேற்கொள்வாா்கள். மேலும், டெங்கு காய்ச்சல் தொடா்பாக, 5 மண்டலங்களிலும் மக்களிடையே தீவிர விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT