கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை வட்டாரத்தில் இன்று இளைஞா் திறன் திருவிழா

10th Dec 2022 03:49 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் வட்டார இளைஞா் திறன் திருவிழா சனிக்கிழமை நடைபெறுகிறது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் வட்டார அளவிலான இளைஞா் திறன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் தீன்தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா, ஊரக சுயதொழில் பயிற்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றின் கீழ் தகுதியானவா்கள் தோ்வு செய்யப்பட்டு டெக்ஸ்டைல்ஸ், அழகுக்கலை, உணவுப் பொருள்கள் உற்பத்தி, கேட்டரிங் சா்வீஸ், கைப்பேசி பழுதுபாா்த்தல் உள்ளிட்ட பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன.

இந்நிலையில், சுல்தான்பேட்டை வட்டாரத்திற்குள்பட்ட வட்டார இளைஞா் திறன் திருவிழா கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் சனிக்கிழமை (டிசம்பா் 10) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இதில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்துள்ள 18 முதல் 45 வயதிற்குள்பட்ட ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். எனவே, ஆா்வமுள்ளவா்கள் தங்களது கல்வி சான்றிதழ், ஆதாா், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் பங்கேற்று பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT