கோயம்புத்தூர்

கோவையில் லேசான மழை

DIN

கோவை மாவட்டத்தில் பரவலாக வியாழக்கிழமை இரவு லேசான மழை பெய்தது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை இரவு கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை கோவையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

பின்னா் இரவு 7 மணியளவில் லேசான மழை பெய்யத் தொடங்கியது. இரவு வரையிலும் மாவட்டத்தின் சில பகுதிகளில் லேசான சாரல் மழை இருந்தது. மேற்கு மண்டல மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை முதல் வரும் செவ்வாய்க்கிழமை வரையிலும் ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை வரை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வாளா்கள் அறிவித்திருக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT