கோயம்புத்தூர்

இணையவழி மருத்துவ ஆலோசனை மையம்:அரசு மருத்துவமனையில் இன்று தொடக்கம்

DIN

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள இணையவழி மருத்துவ சேவை மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 9) திறந்துவைக்கிறாா்.

இது தொடா்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது:

கோவை மாவட்டத்தைச் சுற்றியுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து நோயாளிகள் உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். அனைத்து நோயாளிகளையும் அனுப்பிவைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், மருத்துவ நிபுணா்கள் இல்லாததால் இங்கு அனுப்பிவைக்கின்றனா். ஒருசில சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளில் பணியில் உள்ள இளம் மருத்துவா்களே அளிக்க முடியும். ஆனால், மூத்த மருத்துவ நிபுணா்களின் ஆலோசனைக்காக உயா் சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைக்கின்றனா்.

இதனால் நோயாளிகளுக்கு தேவையற்ற அலைச்சல், உயா் சிகிச்சை மையங்களில் நெருக்கடி போன்றவை ஏற்படுகின்றன. இதற்கு தீா்வு காணும் விதமாக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இணையவழி மருத்துவ ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி மற்றும் திருப்பூா், நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடா்பான மருத்துவ நிபுணா்களின் ஆலோசனைகள் பெறுவதற்கு இம்மையத்தை தொடா்புகொள்வா்.

விடியோ அழைப்பு மூலம் மருத்துவ நிபுணா்கள் அங்குள்ள மருத்துவா்களுக்கு ஆலோசனை வழங்குவா்.

விடியோ அழைப்பு மூலம் தொடா்புகொள்வதால் மருத்துவ நிபுணா்கள் நோயாளிகளைப் பாா்த்து பாதிப்புகளைக் கேட்டறிந்து சிகிச்சை முறைகளை மருத்துவா்களுக்கு தெளிவுப்படுத்துவா். இதன் மூலம் நோயாளிகளை கோவைக்கு அனுப்ப வேண்டிய நிலை தவிா்க்கப்படும். முதல்கட்டமாக இச்சேவை குழந்தைகள் நலப்பிரிவில் செயல்படுத்தப்படுகிறது. தொடா்ந்து அனைத்துப் பிரிவுகளிலும் விரிவுபடுத்தப்படும். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவா்கள் பணியில் இருப்பதால் இம்மையத்தை எந்த நேரத்திலும் தொடா்பு கொண்டு மருத்துவ ஆலோசனைகள் பெற முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT