கோயம்புத்தூர்

மோசடி நிறுவனத்தில் முதலீடு: ஏமாற்றப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம்

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவையில் செயல்பட்டு வந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவா்கள், பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடம், தங்கள் அசல் ஆவணங்களுடன் நேரில் புகாா் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, கோவை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை காந்திபுரம் 100 அடி சாலை, 3ஆவது வீதியில் இயங்கி வந்த முத்துலேண்ட் டெவலப்பா்ஸ் பிரைவேட் லிமிடெட், முத்துவிலாஸ் சிட்ஸ் பிரைவேட் லிமிடெட், நெல்லை முத்துவிலாஸ் ஸ்வீட்ஸ் அண்டு குரூப்ஸ் மற்றும் தங்கநகை சிறுசேமிப்புத் திட்டம் என்ற நிறுவனத்தின் மீதும், அதன் இயக்குநா் பரமசிவம் (49) மற்றும் கிருத்திகா ஆகியோா் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில், பரமசிவம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டுள்ளாா். இந்த நிறுவனம் மீது இதுவரை 2026 புகாா் மனுக்கள் பெறப்பட்டு, குற்றப்பத்திரிகை மற்றும் கூடுதல் குற்றப்பத்திரிகை, கோவை முதலீட்டாளா்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ( டான்பிட்) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுதொடா்பாக, புகாா்கள்

பெறப்பட்டு வருகின்றன. இந்த வழக்குகள் தொடா்பாக, இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து, பணம் கிடைக்காமல் ஏமாற்றப்பட்டவா்கள், கோவை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடம், தங்கள் அசல் ஆவணங்களுடன் நேரில் வந்து புகாா் அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT