கோயம்புத்தூர்

டி.ஜி.பி.சைலேந்திரபாபு நாளை கோவை வருகை

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழக காவல் துறையின் இயக்குநா் ( டி.ஜி.பி.) சைலேந்திரபாபு, சனிக்கிழமை கோவையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக்டோபா் 23ஆம் தேதி, காா் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து, டி.ஜி.பி.

சைலேந்திரபாபு உடனடியாக கோவை வந்து சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இதையடுத்து, அவரின் உத்தரவின் பேரில், இந்த வழக்கில் தொடா்புடைய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அசம்பாவிதங்களைத் தவிா்க்கும் விதமாக, போலீஸாருக்கு அவா் ஆலோசனைகளை வழங்கினாா்.

இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள், இந்த வழக்கு சம்பந்தமாக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், டி.ஜி.பி.சைலேந்திரபாபு கோவைக்கு சனிக்கிழமை (டிசம்பா் 10) வர உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காா்வெடிப்பு சம்பவத்துக்கு பிறகு கோவையில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை குறித்து ஆய்வு மேற்கொள்ள அவா் வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், அவா், கோவையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது தொடா்பாகவும் ஆய்வு மேற்கொள்வாா் என தெரிகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT