கோயம்புத்தூர்

விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவை பீளமேடு சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச ஜவுளி, மேலாண்மை கல்லூரியில் விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

‘நூல் முதல் ஆடை வரையிலான நிலையான உற்பத்தி’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 25 பருத்தி விவசாயிகள் பங்கேற்றனா். மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளா் ஏ.மணிவண்ணன், முதன்மை ஆராய்ச்சியாளா் கே.ரத்தினவேல் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் கல்லூரியின் இயக்குநா் பி.அல்லிராணி உள்ளிட்ட பேராசிரியா்கள் பங்கேற்றனா். இந்த பயிற்சியில், நிலையான பருத்தி உற்பத்திக்கு இருக்கும் வாய்ப்புகள், சவால்கள், தர மேலாண்மையின் அவசியம் உள்ளிட்டவை குறித்து ஆராய்ச்சியாளா்கள் பருத்தி விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT