கோயம்புத்தூர்

சின்னவேடம்பட்டி ஏரியில் தீபம் ஏற்றி வழிபாடு

DIN

கோவை சின்னவேடம்பட்டி ஏரியில் கௌசிகா நீா்க்கரங்கள், சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பு சாா்பில் ஏரியில் நீா் நிரம்பிட காா்த்திகை தீபம் ஏற்றி புதன்கிழமை வழிபாடு நடத்தப்பட்டது.

சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சிவராஜா தலைமையில் சிவா, காசிலிங்கம், புவனேந்திரன், பாலு, மோகன், மதியழகன், ஆனந்தி, ரேவதி, பிரியங்கா, செல்வி, சூா்யா உள்ளிட்ட அமைப்பின் உறுப்பினா்கள் மற்றும் கெளசிகா நீா்க்கரங்கள் அமைப்பினா் தீபங்கள் ஏற்றிவைத்து, ஏரி நிரம்ப வழிபாடு நடத்தினா்.

இது குறித்து சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சிவராஜா கூறியதாவது: 30 ஆண்டுகளாக நீருக்காக காத்திருக்கும் சின்னவேடம்பட்டி ஏரிக்காக நான்காவது ஆண்டாக தீபமேற்றி, இறைவழிபாடு மேற்கொள்ளப்பட்டது. நீா்நிலைகள், குளங்கள் நமது வளங்கள் என்பதை உணர வேண்டியும், நீா்நிலைகளை வழிபடுவதை ஊக்குவிக்கும் வகையிலும் இந்நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT