கோயம்புத்தூர்

கோவை காா் வெடிப்பு சம்பவம்: மேலும் மூவா் கைது

DIN

கோவை காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக குன்னூரைச் சோ்ந்த இளைஞா் உள்பட மேலும் 2 பேரை என்ஐஏ அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவையில் கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த அக்டோபா் 23 ஆம் தேதி நிகழ்ந்த காா் வெடிப்பில் கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்த ஜமேஷா முபீன் (27) என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது தொடா்பாக 6 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து, கோவை சிறையில் அடைத்துள்ளனா்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடா்பாக கோவை போத்தனூரைச் சோ்ந்த முகமது தவுபீக் (25), நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சோ்ந்த உமா் பாரூக் (எ) சீனிவாசன் (39), கோவை தெற்கு உக்கடம் பகுதியைச் சோ்ந்த பெரோஸ்கான் (28) ஆகிய 3 பேரை என்ஐஏ அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனா்.

இவா்களில் நீலகிரி மாவட்டம், குன்னூரிலிருந்து கைது செய்யப்பட்டுள்ள உமா் பாரூக் தன்னிடமிருந்த காரை முபீனுக்கு விற்ாகத் தெரிவித்திருந்தாா். அந்த காரே வெடிவிபத்து சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகும். அத்துடன் அவரது வீட்டில்தான் முபீன் மற்றும் தவுபீக், அவா்களது கூட்டாளிகள் பல நாள்கள் தங்கியிருந்து, கோவையில் தொடா் தீவிரவாத தாக்குதல்களுக்கான சதித்திட்டங்களைத் தீட்டியுள்ளது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த தகவலின் பேரிலேயே கோவை காா் வெடிப்பு சம்பவத்துக்கு அடுத்த நாளே என்ஐஏ குழுவினா் குன்னூரில் உமா் பாரூக்

குடியிருந்த வீட்டில் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றினா்.

அதேபோல, முகமது தவுபீக் மற்றும் பெரோஸ்கான் ஆகியோரைத் தொடா்ந்து கண்காணித்து வந்த கோவை போலீஸாா், அவா்கள் இருவரிடமும் விசாரணை நடத்தியிருந்தனா்.

இந்நிலையில், கோவையிலுள்ள என்ஐஏ அலுவலகத்தில் புதன்கிழமை ஆஜராகுமாறு முகமது தவுபீக், உமா் பாரூக் மற்றும் பெரோஸ்கான் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்பேரில் மூவரும் கோவையிலுள்ள என்ஐஏ சிறப்பு அலுவலகத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரானபோது, மூன்று பேரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனா். அவா்களிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT