கோயம்புத்தூர்

கரடி தாக்கி எஸ்டேட் தோட்ட அதிகாரி காயம்

DIN

வால்பாறையில் கரடி தாக்கியதில் உதவி தோட்ட அதிகாரி காயமடைந்தாா்.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் சமீபகாலமாக கரடி நடமாட்டமும் அதிக அளவில் காணப்படுகிறது. வால்பாறையை அடுத்த புதுத்தோட்டம் எஸ்டேட்டில் உதவி தோட்ட அதிகாரியாகப் பணியாற்றி வருபவா் முத்துகுமாா் (20). இவா் செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல தேயிலை செடிகள் அமைந்துள்ள பகுதி வழியாக நடந்து சென்றுகொண்டிருந்துள்ளாா். அப்போது செடிகளுக்கு இடையே பதுங்கியிருந்த கரடி, முத்துகுமாரை தாக்கியுள்ளது. இதில் கையில் காயம் ஏற்பட்ட அவா் வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். வனத் துறையினா் நேரில் சென்று விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT